ஐ.பி.எல்., தொடரில் 'பவர் பிளேயர்'

Indian News

Indian News

Author 2019-11-06 03:40:42

img

புதுடில்லி: ஐ.பி.எல்., தொடரில் 'பவர் பிளேயர்' என்ற புதிய முறை அறிமுகாக உள்ளது.

ஐ.பி.எல்., தொடரில் ரசிகர்களுக்கு ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில், அணி நிர்வாகங்கள் இணைந்து புது விதிமுறை வகுத்துள்ளன. இதன் படி களமிறங்கும் போது 11 வீரர்கள் பட்டியலை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒட்டுமொத்தமாக 15 பேர் இடம் பெறுவர். போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப, அதாவது கடைசி ஓவரில் 20 ரன், அல்லது கடைசி பந்தில் சிக்சர் தேவை எனில், முதல் 11 பேரில் இடம் பெறாத 'ஆல் ரவுண்டர்' ரசல் போன்றவர் இருந்தால், அவரை பேட்டிங் செய்ய அழைக்கலாம்.

ஒருவேளை கடைசி ஓவரில் 6 ரன் மட்டும் தான் கொடுக்க வேண்டும்.

களத்துக்கு வெளியே பும்ரா போன்ற பவுலர் இருந்தால், அவரை அழைத்து கேப்டன் பந்து வீசச் செய்து, போட்டியை காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கலாம்.

ஒட்டுமொத்த கிரிக்கெட்டின் இலக்கணத்தை மாற்றும் வகையிலான இம்முறையை வரும் 9ம் தேதி துவங்கவுள்ள சையது முஷ்தாக் அலி டிராபி 'டுவென்டி-20' தொடரில் பரிசீலிக்க வேண்டும். பின் ஐ.பி.எல்., தொடரில் அறிமுகம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து நாளை நடக்கும் கட்டுப்பாட்டு குழு கூட்டத்தில் பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலி இறுதி முடிவு எடுக்க உள்ளார்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN