ஒரு அணிக்கு 15 வீரர்கள். மாற்று வீரராக 4 பேர் - ஐபிஎல் அதிரடி !
கிரிக்கெட் போட்டிகளில் ஒரு அணிக்கு 11 பிளேயர்கள் மற்றும் ஒரு மாற்று வீரர் என்பது நடைமுறையாக இருந்து வருகிறது. போட்டியின் போது ஏதேனும் ஒரு வீரருக்குக் காயம் ஏற்பட்டாலோ அல்லது தவிர்க்க முடியாத காரணங்களால் விளையாட முடியாமல் போனாலோ அவருக்கு பதிலாக மாற்று வீரர் களப்பணி செய்வார். ஆனால் அவர் பேட்டிங்கோ, பவுலிங்கோ செய்ய முடியாது.
பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பெயர் போன ஐபில் போட்டிகளில் இந்த விதியில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இந்த முறைக்கு பவர் பிளேயர் எனப் பெயரிடப்பட்டுள்ளது.