ஒரே போட்டியில் 2 சாதனை படைத்த இலங்கை பெண் கிரிக்கெட்டர் !

TIMES NOW

TIMES NOW

Author 2019-09-30 18:37:07

img

இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் சமாரி அதபத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் அபார சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியா-இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் அடித்தது. ஆஸ்திரேலிய அணியின் பெத் மோனி 61 பந்துகளில் 113 ரன்கள் அடித்தார். அதனை தொடர்ந்து 218 ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணியின் கேப்டன் சமாரி அதபத்து 66 பந்துகளில் 113 ரன்களை விளாசினார். இறுதியில் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு இலங்கை அணி 176 ரன்கள் அடித்து 41 ரன்கள் வித்தியத்தில் தோல்வியை தழுவியது.

இருப்பினும் இந்த சதத்தின் மூலம் இலங்கை அணியின் கேப்டன் சமாரி அதபத்து ஒரே போட்டியில் 2 சாதனைகளை படைத்துள்ளார். டி-20 போட்டியில் சதம் அடித்த முதல் இலங்கை பெண் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையும், டி-20 போட்டியில் சேஸிங்கின் போது சதம் அடித்த முதல் பெண்கள் அணி கேப்டன் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

அவரது இந்த சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர். இருப்பினும் அவர் சதம் அடித்த போதிலும் அவரின் அணி தோல்வியை தழுவியுள்ளது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD