ஒவ்வொரு ஆண்டும் உலக கோப்பை * ஐ.சி.சி., முடிவுக்கு எதிர்ப்பு

Indian News

Indian News

Author 2019-10-15 03:52:54

img

துபாய்: ஒவ்வொரு ஆண்டும் 'டுவென்டி-20' உலக கோப்பை, மூன்று ஆண்டுக்கு ஒருமுறை 50 ஓவர் உலக கோப்பை நடத்த ஐ.சி.சி., திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஒவ்வொரு அணிகளும் அடுத்த ஐந்து ஆண்டுக்குரிய போட்டி அட்டவணை திட்டத்தை தாங்களாக தயாரித்துக் கொள்ளலாம். வரும் 2023-28 ம் ஆண்டுக்குரிய போட்டிகள் விபரத்தை இன்னும் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) வெளியிடவில்லை.

இதற்கு முன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 'டுவென்டி-20' உலக கோப்பை, மூன்று ஆண்டுக்கு ஒருமுறை 50 ஓவர் உலக கோப்பை நடத்த ஐ.சி.சி., திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால் 'டி.வி.,' ஒளிபரப்பு உள்ளிட்ட பல்வேறு மீடியா உரிமைகளை முன்னதாக கைப்பற்ற ஐ.சி.சி., திட்டமிடுவதாக தெரிகிறது.

இதனால் தங்களது வருமானம் பெருமளவு பாதிக்கப்படும் என்பதால், பி.சி.சி.ஐ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. புதியதாக தேர்வு செய்யப்பட்ட தலைவர் கங்குலி இதை எப்படி சமாளிக்கப் போகிறார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN