கங்குலிக்கு அசார் ஆதரவு * பகலிரவு டெஸ்ட் நடத்தலாம்

Indian News

Indian News

Author 2019-10-26 21:51:27

img

ஐதராபாத்: ''ரசிகர்கள் விரும்பினாலும், இல்லையென்றாலும் பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்திப் பார்க்க வேண்டும்,'' என அசார் தெரிவித்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அதிக ரசிகர்களை கொண்டு வரும் வகையில் பிரபலப்படுத்தும் வகையில்ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் பகலிரவுஆட்டமாகநடத்தப்படுகிறது.இந்தியாவில் இதுபோல நடத்த கேப்டன் கோஹ்லி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆர்வம் தெரிவிக்கவில்லை என கூறப்பட்டது.இந்திய கிரிக்கெட் போர்டு தலைவர்(பி.சி.சி.ஐ.,)கங்குலி, பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு பச்சை கொடி காட்டியுள்ளார்.

தற்போதுகேப்டன் கோஹ்லியும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் கேப்டன், ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் முகமது அசார் கூறியது:

தலைவர் கங்குலி போல, கேப்டன் கோஹ்லியும் சம்மதம் தெரிவித்தது நல்ல விஷயம் தான்.

இது சோதனை முயற்சி தான். ரசிகர்கள் விரும்பினாலும், இல்லையென்றாலும் பகலிரவு டெஸ்ட் நடத்திப் பார்க்க வேண்டும்.

இவ்வாறு அசார் கூறினார்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN