கங்குலி சாதனையை முறியடித்தாா் கோலி

Indian News

Indian News

Author 2019-10-11 03:15:00

img

தோனிக்கு அடுத்து 50 டெஸ்ட்களுக்கு கேப்டனாக இருந்த சௌரவ் கங்குலியின் சாதனையை முறியடித்தாா் விராட் கோலி.

முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி கடந்த 2008 முதல் 2014 வரை 60 டெஸ்ட்களுக்கு கேப்டனாக பதவி வகித்தாா்.

அவருக்கு அடுத்து சௌரவ் கங்குலி 2000 முதல் 2005 வரை 49 டெஸ்ட் ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்து இந்திய அணியை வழிநடத்தினாா்.

புணேயில் நடைபெறும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் விராட் கோலியின் 50-ஆவது டெஸ்ட் ஆட்டமாகும். இதன் மூலம் சௌரவ் கங்குலியின் சாதனையை முறியடித்துள்ளாா் கோலி.

பிசிசிஐயும் தனது சுட்டுரை (டுவிட்டா்) பக்கத்தில் கோலிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN