கபில் தேவ் ராஜினாமா

Indian News

Indian News

Author 2019-10-03 03:45:43

img

புதுடில்லி: சி.ஏ.சி., தலைவர் பொறுப்பில் இருந்து இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில் தேவ் ராஜினாமா செய்தார்.

இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில் தேவ் 60. கடந்த 1983ல் இந்தியாவுக்கு முதன் முறையாக உலக கோப்பை பெற்றுத் தந்தார். புதிய பயிற்சியாளரை நியமிக்க, இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) சார்பில் அமைக்கப்பட்ட மூன்று நபர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி (சி.ஏ.சி.,) தலைவராக உள்ளார்.

அதேநேரம் கபில்தேவ், புதியதாக உருவாக்கப்பட்ட வீரர்கள் சங்கத்தின் இயக்குனராகவும் உள்ளார். இதனால் ஆதாயம் பெறும் வகையில் இரட்டை பதவி வகிப்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விளக்கம் தருமாறு பி.சி.சி.ஐ.,யை நிர்வகிக்கும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு குழு (சி.ஒ.ஏ.,) நோட்டீஸ் அனுப்பியது.

இதனிடையே சி.ஏ.சி., உறுப்பினராக இருந்த சாந்தா ரங்கசாமி சி.ஏ.சி., உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார். இந்த வரிசையில், கபில் தேவ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து சி.ஒ.ஏ.,க்கு 'இ-மெயில்' அனுப்பியுள்ளார்.

அதில்,'இந்திய ஆண்கள் அணி தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்த குழுவுக்கு தலைவராக இருந்தது மகிழ்ச்சி. தற்போது இந்த பதவியில் இருந்து விலகுகிறேன்,' என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சி.ஒ.ஏ., தலைவர் வினோத் ராய் கூறுகையில்,''கபில் தேவ் ராஜினாமா செய்யத் தேவையில்லை. ஏனெனில் இக்குழு பயிற்சியாளரை தேர்வு செய்ய மட்டும் தான் நியமிக்கப்பட்டது,'' என்றார்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN