கார்த்திக் அதிரடியில் தமிழகம் 4வது வெற்றி

Indian News

Indian News

Author 2019-10-02 02:41:18

img

ஜெய்பூர்: விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் தொடரில், கேப்டன் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தால் தமிழக அணி 74 ரன் வித்தியாசத்தில் பெங்கால் அணியை வீழ்த்தியது. ஜெய்பூரியா வித்யாலயா மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற பெங்கால் அணி முதலில் பந்துவீசியது. தமிழகம் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 286 ரன் குவித்தது. கார்த்திக் 97 ரன் (62 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்), ஷாருக் கான் 69* ரன் (45 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்), விஜய் ஷங்கர் 41, அபராஜித் 34 ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய பெங்கால் அணி 45.3 ஓவரில் 212 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. முதல் 5 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்த நிலையில், 7வது வீரராகக் களமிறங்கிய ஷாபாஸ் அகமது 107 ரன் (131 பந்து, 7 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசி மிரட்டினார்.

மஜும்தார் 36, அர்னாப் நந்தி 14 ரன் எடுத்தனர். தமிழக பந்துவீச்சில் அபராஜித், விக்னேஷ், நடராஜன், எம்.அஷ்வின் தலா 2, முகமது 1 விக்கெட் வீழ்த்தினர். சி பிரிவில் தொடர்ச்சியாக 4வது வெற்றியை பதிவு செய்த தமிழகம் 16 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN