கிரிக்கெட் தீம் ரெஸ்டாரண்ட் : இந்தியாவில் எங்கு உள்ளது?

News18

News18

Author 2019-09-30 13:34:50

img

கிரிக்கெட் ரசிகர்களை மனதில் வைத்து செதுக்கியதுதான் இந்த கிரிக்கெட் தீம் ரெஸ்டாரண்ட்.

இந்தியாவின் கேப்டனாக இருந்த சௌரவ் கங்குலி கடந்த வெள்ளிக் கிழமையன்று கொல்கத்தாவில் இந்த ரெஸ்டாரண்டை திறந்துவைத்துள்ளார்.

இந்த ரெஸ்டாரண்ட் முழுவதும் கிரிக்கெட்டில் மறக்க முடியாத சம்பவங்களைக் கொண்ட 100 புகைப்படங்களை பொருத்தப்பட்டுள்ளது. அதோடு சச்சின், விராட் கோலி, தோனி, விவிஎஸ் லக்‌ஷ்மன், ஷஹித் அஃப்ரிடி, க்ரிஸ் கெயில், டேவிட் வார்னர் என மிக முக்கிய கிரிக்கெட் வீரர்களில் கையெழுத்துகளையும் ஆங்காங்கே பொறிக்கப்பட்டுள்ளன.

img

”ஸ்ரீலங்கா, லண்டன் போன்ற இடங்களில் கிரிக்கெட் தீம் ரெஸ்டாரண்டுகளைப் பார்த்திருக்கிறேன். இது அவை எல்லாவற்றையும் விட தனித்துவமாக இருக்கிறது. எண்ணிலங்காத நினைவுகளை ஒரு கணம் கண் முன்னே கொண்டு வருகின்றன. கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் நிச்சயம் ஒருமுறையேனும் இந்த ரெஸ்டாரண்டை கண்டுகளிக்க வேண்டும்” என கங்குலி கூறியுள்ளார்.

இந்த 100 புகைப்படங்களையும் ஐபிலுக்காக உழைத்தவர்களுள் ஒருவரான மொயின் பின் மோக்சுத் என்பவர் சேகரித்து இங்கு வடிவமைத்துள்ளார்.

img

கிரிக்கெட் தீம் மட்டுமல்லாது உணவிலும் இந்த ரெஸ்டாரண்ட் சளைத்தது அல்ல. தந்தூரி, இந்திய மற்றும் சைனீஸ் குசைன்களை சுவை மாறாமல் அளிக்கிறது.

இங்கு உணவு அளிக்கும் பணியாளர்களும் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து உபசரிக்கின்றன. ரெஸ்டாரண்டின் மத்தியில் பெரிய திரையில் கிரிக்கெட் ஹைலைட்டுகள், லைவ் போன்றவை திரையிடப்படுகிறது. இதனால் நம் மனம் முழுவதும் கிரிக்கெட் மைதானத்திற்கு சென்று வந்த அனுபவத்தை அளிக்கிறது.

பார்க்க :

முடி வளர என்ன செய்ய வேண்டும்?

லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD