கிரிக்கெட் விளையாடிய வில்லியம், கேத்

Tamil Mithran

Tamil Mithran

Author 2019-10-18 03:50:53

img

லாகூர்: பாக்., சென்றுள்ள பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேத் மிடில்டன், அங்குள்ள அகாடமியில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர். லாகூரிலுள்ள கேன்சர் மருத்துவனைக்கு சென்று, அங்கு சிகிச்சை பெறும் குழந்தைகளுடனும் நேரம் செலவிட்டனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டன் அரச குடும்பத்தை சேர்ந்த எவரும் பாக்.,கிற்கு சென்றதில்லை. இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் உள்ள பிரிட்டன் தூதர் தாமஸ் டுரீவ் அளித்த அழைப்பின் பேரில், இளவரசர் வில்லியமும், அவரது மனைவியும் 5 நாள் பயணமாக பாக்., சென்றுள்ளனர். இந்த தம்பதியின் முதல் பாக்., பயணம் இது.

அக்., 14 அன்று இரவு இஸ்லாமாபாத் சென்ற அரச தம்பதி, அக்.,15 அன்று நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தொடந்து அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர்கள், லாகூரிலுள்ள பாக்., தேசிய கிரிக்கெட் அகாடமியில் கிரிக்கெட் விளையாடினர். கேத், வில்லியம் இருவரும் பேட்டிங் செய்த போட்டோக்கள், வீடியோக்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

தொடர்ந்து லாகூர் புற்றுநோய் மருத்துவமனைக்கு சென்ற அரச தம்பதிகள், அங்கு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளிடம் நலம் விசாரித்ததுடன், அவர்களுடன் நேரம் செலவிட்டனர். தொடர்ந்து வரலாற்று சிறப்பு சிறப்பு மிக்க பாட்சாகி மசூதிக்கும் சென்றனர்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN