கேரி கிறிஸ்டன் போல மோசமான சாதனை படைத்த மார்க்ராம்,..

Indian News

Indian News

Author 2019-10-14 15:13:12

img

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையே புனேவில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டை இழந்து 601ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது.இதைத்தொடர்ந்து இறங்கிய தென்னாபிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 275 ரன்கள் எடுத்து அனைத்து இழந்தது.

இதை தொடர்ந்து இந்திய அணி ,தென் ஆபிரிக்க அணிக்கு பாலோ ஆன் கொடுத்தது. பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 189 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் ஐடன் மார்க்ராம் 2 இன்னிங்ஸிலும் டக் அவுட்டானார்.

இதன் மூலம் இரு இன்னிங்சிலும் டக் அவுட் ஆன தென்னாபிரிக்க அணியின் மூன்றாவது தொடக்க வீரர் என்ற பட்டியலில் இணைந்துள்ளார். இதற்கு முன் இந்த பட்டியலில் தென்னாபிரிக்க அணியின் தொடக்க வீரர்களான கேரி கிறிஸ்டன், கிப்ஸ் ஆகிய இருவரும் இந்த மோசமான சாதனையை செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN