கொல்கத்தாவை வீழ்த்தியது கேரளா

Indian News

Indian News

Author 2019-10-21 03:29:21

img

கொச்சி: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் தொடக்க போட்டியில், கேரளா பிளேஸ்டர்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அத்லெடிகோ டி கொல்கத்தா அணியை வீழ்த்தியது.இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டித் தொடரின் 6வது சீசன் கொச்சி நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் கேரளா பிளேஸ்டர்ஸ் - அத்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதின. 6வது நிமிடத்திலேயே கொல்கத்தா வீரர் எம்சுக் அபாரமாக கோல் அடித்து அந்த அணிக்கு முன்னிலை கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்திய கேரளா அணிக்கு, 30வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் ஓக்பெச்சே கோல் அடித்து 1-1 என சமநிலை ஏற்படுத்தினார்.

45வது நிமிடத்தில் ஓக்பெச்சே மீண்டும் ஒரு கோல் போட, கேரளா 2-1 என முன்னிலை பெற்றது. பதில் கோல் அடிக்க கொல்கத்தா வீரர்கள் கடுமையாக முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை.விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் கேரளா பிளேஸ்டர்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்து 3 புள்ளிகளை தட்டிச் சென்றது.

பெங்களூரு, எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த கால் இறுதியில் கர்நாடகா - புதுச்சேரி அணிகள் மோதின. டாசில் வென்ற கர்நாடகா முதலில் பந்துவீச, புதுச்சேரி அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 207 ரன் எடுத்தது. அந்த அணி 15.1 ஓவரில் 41 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில்... சாகர் திரிவேதி 54, விக்னேஷ்வரன் மாரிமுத்து 58, பபித் அகமது 37 ரன் எடுத்து கவுரவமான ஸ்கோரை எட்ட உதவினர். கர்நாடகா பந்துவீச்சில் பிரவீன் துபே 3, மிதுன், கவுஷிக் தலா 2, பிரசித் கிரிஷ்ணா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய கர்நாடகா 41 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 213 ரன் எடுத்து எளிதாக வென்றது. கே.எல்.ராகுல் 90 ரன் (112 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்), தேவ்தத் படிக்கல் 50 ரன் (54 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தனர். ரோகன் கடம் 50 ரன் (68 பந்து, 3 பவுண்டரி), கேப்டன் மணிஷ் பாண்டே 20 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற கர்நாடகா அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD