கோபத்தில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி

Indian News

Indian News

Author 2019-09-27 04:55:58

img

புதுடில்லி: ''அணியில் யாராவது மோசமாக செயல்பட்டால், அவர்களை அதில் இருந்து மீண்டு வர உதவி செய்வேன்,'' என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட்டின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் 21. தோனிக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட இவர், தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் வீணடித்து வருகிறார். கடைசியாக களமிறங்கிய 10 ஒருநாள் இன்னிங்சில் 229 ரன்கள் மட்டும் எடுத்தார்.

இவருக்கு கேப்டன் கோஹ்லி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் 'அட்வைஸ்' தர வேண்டும் என யுவராஜ் சிங் உள்ளிட்ட பலர் தெரிவித்தனர்.

இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறியது:

எதற்கெடுத்தாலும் அணி நிர்வாகத்தை குறை சொல்லக் கூடாது.

என்னைப் பொறுத்தவரையில் அணியில் யாராவது மோசமாக செயல்பட்டால், அவர்களை அதில் இருந்து மீண்டு வர உதவி செய்வேன். மற்றபடி இங்கு தபேலா வாசிக்க வரவில்லை.

ரிஷாப் பன்ட் உலகத் தரம் வாய்ந்த பேட்ஸ்மேன். எதிரணியின் பந்து வீச்சை துவம்சம் செய்வதில் வல்லவர். சர்வதேச கிரிக்கெட்டில் பிரகாசிக்க, நாம் எல்லோரும் அவருக்கு ஆதரவு தர வேண்டும். விமர்சகர்களை பொறுத்தவரை அவர்கள் வேலையை செய்கின்றனர்.

'இளம்' ரிஷாப் 'ஸ்பெஷல்' வீரர். உள்ளூர் கிரிக்கெட்டில் ஏற்கனவே திறமை நிரூபித்துள்ளார். சர்வதேச அரங்கில் தற்போது கற்று வருகிறார். இவர் மீண்டு வர அணி நிர்வாகம் உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு ரவி சாஸ்திரி கூறினார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD