கோப்பை வெல்வாரா கோஹ்லி * டெஸ்ட் தொடர் நாளை துவக்கம்

Indian News

Indian News

Author 2019-10-02 00:00:15

img

விசாகப்பட்டனம்: இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை விசாகப்பட்டனத்தில் துவங்குகிறது. சொந்த மண்ணில் மிரட்டி வரும் கோஹ்லி தலைமையிலான இந்திய அணிக்கு மீண்டும் ஒரு கோப்பை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நாளை விசாகப்பட்டனத்தில் துவங்குகிறது. இதில் சாதிக்க இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சொந்தமண் பலம்

நேற்று கேப்டன் கோஹ்லி, பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். மற்றொரு பக்கம் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மேற்பார்வையில் வேகப்பந்து வீச்சாளர்கள் இஷாந்த் சர்மா, முகமது ஷமி பந்து வீசி பயிற்சி செய்தனர்.

சமீபகாலமாக அன்னிய மண்ணிலும் டெஸ்டில் சாதித்து வரும் இந்திய அணி, சொந்தமண்ணில் மீண்டும் ஆதிக்கத்தை தொடர திட்டமிட்டுள்ளது.

பத்து கோப்பை

கடந்த 2010 முதல் உள்ளூரில் விளையாடிய 10 டெஸ்ட் தொடர்களையும் இந்தியா வென்றது. இதில் மொத்தம் நடந்த 32 டெஸ்டில், இந்தியா 24 ல் வெற்றி பெற்றது. 7 போட்டிகள் 'டிரா' ஆக, ஒரு போட்டியில் (எதிர்-ஆஸி., 2017) மட்டும் தோற்றது.

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக சொந்தமண்ணில் இந்தியா 6 டெஸ்ட் தொடரில் மோதியது. இதில் மூன்றில் கோப்பை வென்றது. 2000ல் தென் ஆப்ரிக்கா வென்றது. 2 தொடர்கள் 'டிரா' ஆகின. இருப்பினும், 2000க்குப் பின் இந்திய மண்ணில் தென் ஆப்ரிக்கா கோப்பை வெல்லவில்லை என்பது நல்ல செய்தி தான்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN