கோலியின் பத்தாண்டு சாதனையை காலி செய்த கில்..!!

Indian News

Indian News

Author 2019-11-05 08:15:52

img

தியோதர் டிராபியில் இந்தியா சி கேப்டனாக இருக்கும் சுப்மன் கில், உள்நாட்டுத் தொடரின் இறுதிப் போட்டியில் விராட் கோலியின் 10 வருட சாதனையை முறியடித்துள்ளார்.

இந்தியாவில் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வரும் உள்ளூர் தொடரான தியோதர் கோப்பை ஒருநாள் தொடர் நடைபெற்று வந்தது. இதில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பர்தீவ் பட்டேல் தலைமையிலான இந்தியா பி ஆணி, சுப்மன் கில் தலைமையிலான இந்தியா சி அணியை எதிர்கொண்டது.இதன் மூலம் சுப்மன் கில் இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் தொடர்களில் இளம் வயதில் அணியை வழிநடத்தி இறுதிப் போட்டி வரை எடுத்து சென்ற முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இதற்கு முன் தற்போதைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, 2009-10 சீசனில் தனது 21ஆவது வயதில் வடக்கு மண்டலத்தின் கேப்டனாக இருந்து இச்சாதனையை நிகழ்த்தினார்.

ஆனால், சுப்மன் கில் தனது 20ஆவது வயதிலேயே இந்தியா பி அணியை வழிநடத்தி இறுதிப்போட்டி வரை எடுத்து சென்றுள்ளார். இதன்மூலம் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD