கோஹ்லியை மிஞ்சும் ரோகித் * சேவக் புகழாரம்

Indian News

Indian News

Author 2019-11-10 03:42:49

img

புதுடில்லி: ''கிரிக்கெட்டின் ஒரு சில பிரிவுகளில் கோஹ்லியைவிட ரோகித் சர்மா சிறப்பாக செயல்படுகிறார்,'' என சேவக் தெரிவித்தார்.

இந்திய அணி துவக்க வீரர் ரோகித் சர்மா 32. ஒருநாள் அரங்கில் மூன்று முறை இரட்டை சதம் அடித்தார். கடந்த உலக கோப்பை தொடரில் 5 சதங்கள் விளாசினார். தற்போதைய வங்கதேச அணிக்கு எதிரான 'டுவென்டி-20' தொடரில் கேப்டனாக செயல்படுகிறார்.

ராஜ்கோட்டில் நடந்த போட்டியில் 43 பந்தில் 85 ரன்கள் குவித்தார். இதையடுத்து 'டுவென்டி-20' அரங்கில் 'சேஸ்' செய்த போட்டிகளில் முதல் 10 ஓவரில் அதிகரன் குவித்த முதல் வீரர் ஆனார்.

இவர் 79 ரன் எடுத்திருந்தார். கெய்ல் (விண்டீஸ், 75 ரன்) அடுத்து உள்ளார்.

மூன்று வித கிரிக்கெட்டிலும் சேர்த்து 2019ல் அதிக சிக்சர் அடித்த வீரர்களில் ரோகித் (66) முதலிடத்தில் உள்ளார். மார்கன் (65, இங்கிலாந்து), கெய்ல் (58) அடுத்த இரு இடம் பெற்றனர். ரோகித்தின் அதிரடி குறித்து இந்திய அணி முன்னாள் கேப்டன் சேவக் கூறியது:

'என்னால் சிறப்பாக விளையாட முடியும் போது, ஏன் உங்களால் முடியாது,' என சச்சின் மற்றவர்களிடம் சொல்வார். ஆனால், 'கடவுள்' ஒருவர் மட்டுமே என்பதை புரிந்து கொள்ள மாட்டார். கடவுள் செய்வதை மற்றவர்களால் செய்ய முடியாது.

இதுபோலத் தான் ரோகித். இவரும் சச்சின் போன்றவர். இப்போது ரோகித் என்ன செய்கிறாரோ, அதை கோஹ்லியால் கூட செய்ய முடியாது. ஒரே ஓவரில் 3 அல்லது 4 சிக்சர்கள் அடிப்பது அல்லது 45 பந்தில் 80 முதல் 90 ரன்கள் வரை எடுப்பது எல்லாம் ஒரு கலை. ரோகித் 'ரெகுலராக' இப்படித் தான் ரன்கள் குவித்து வருகிறார். கோஹ்லியிடம் இதுபோன்ற ஆட்டத்திறனை பார்த்தது இல்லை.

இவ்வாறு சேவக் கூறினார்.

37

'டுவென்டி-20' அரங்கில் அதிக சிக்சர் அடித்த இந்திய அணி கேப்டன்களில் ரோகித் (37 சிக்சர், 17 இன்னிங்ஸ்) தான் முதல்வன். தோனி (62ல் 34 சிக்சர்), கோஹ்லி (26ல் 26 சிக்சர்) அடுத்த இரு இடத்தில் உள்ளனர்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD