கோஹ்லி இரட்டைச்சதம் –ரன் மெஷினின் இரு சாதனைகள் !

Webdunia

Webdunia

Author 2019-10-11 18:50:26

img

கோலி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரானப் போட்டியின் இரண்டாம் நாளான இன்று இரட்டைச்சதம் விளாசி சாதனைகள் புரிந்துள்ளார்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று புனே நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நான்காவது வீரராகக் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி இரட்டைச்சதம் அடித்துள்ளார். அவர் அடிக்கும் ஏழாவது இரட்டைச்சதம் இதுவாகும். இதன் மூலம் அதிக இரட்டைச்சதம் அடித்தவர்கள் பட்டியலில் அவர் நான்காம் இடத்தில் உள்ளார். அவருக்கு முன்னால் பிராட்மேன், சங்ககரா, லாரா ஆகியோர் மட்டுமே உள்ளனர்.

மேலும் இந்த இரட்டைச்சதத்தின் மூலம் அவர் டெஸ்ட் போட்டிகளில் 7000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN