கோஹ்லி, பும்ரா 'நம்பர்-1': ஐ.சி.சி., ஒருநாள் தரவரிசையில்...

Indian News

Indian News

Author 2019-10-04 04:30:23

img

துபாய்: ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான பேட்டிங், பவுலிங் தரவரிசையில் முறையே இந்தியாவின் கோஹ்லி, பும்ரா 'நம்பர்-1' இடத்தை தக்கவைத்துக் கொண்டனர்.சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, 895 புள்ளிகளுடன் 'நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறார். அடுத்த இரண்டு இடங்களில் முறையே இந்தியாவின் ரோகித் சர்மா (863 புள்ளி), பாகிஸ்தானின் பாபர் ஆஸம் (834) தொடர்கின்றனர்.பாகிஸ்தானின் பாகர் ஜமான் (16வது இடம்), ஹாரிஸ் சோகைல் (32வது), இலங்கையின் தனுஷ்கா குணதிலகா (70வது) முன்னேற்றம் கண்டனர்.பும்ரா முதலிடம்: பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, 797 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார்.

பும்ரா முதலிடம்: பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, 797 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். அடுத்த இரண்டு இடங்களை நியூசிலாந்தின் டிரண்ட் பவுல்ட் (740 புள்ளி), தென் ஆப்ரிக்காவின் ரபாடா (694) தக்கவைத்துக் கொண்டனர்.

சமீபத்தில் முடிந்த இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 4 விக்கெட் கைப்பற்றிய பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஆமிர், 6 இடங்கள் முன்னேறி, முதன்முறையாக 7வது இடத்தை கைப்பற்றினார். இவர், கடந்த ஜூன் மாதம் 10வது இடம் பிடித்திருந்தார். மற்றொரு பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் உஸ்மான் ஷின்வாரி 28 இடங்கள் முன்னேறி, 43வது இடம் பிடித்தார்.

இந்தியா 'நம்பர்-2'" ஐ.சி.சி., சிறந்த அணிகளுக்கான தரவரிசையில் பாகிஸ்தான் (98 புள்ளி), இலங்கை (79) அணிகள் முறையே 6, 8வது இடத்தில் நீடிக்கின்றன. முதல் மூன்று இடங்களில் முறையே இங்கிலாந்து (125 புள்ளி), இந்தியா (122), நியூசிலாந்து (112) அணிகள் உள்ளன.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN