சதமடித்த பெண் கிரிக்கெட் விரர்... ஒரே போட்டியில் 2 சாதனை

News18

News18

Author 2019-09-30 10:49:55

img

இலங்கை அணியின் கேப்டன் சமாரி அதபத்து 66 பந்துகளில் 113 ரன்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலிய-இலங்கை பெண்கள் அணிகளுக்கு இடையேனான 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டி சிட்னியில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 217 ரன்களை அடித்தது. ஆஸ்திரேலிய அணியின் மோனி 113 ரன்கள் அடித்து அசத்தினார்.

இதையடுத்து 218 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

முதல் போட்டியில் தோல்வி அடைந்தாலும் இலங்கை அணியின் கேப்டன் 2 சாதனைகளை படைத்துள்ளார். இலங்கை அணியின் கேப்டன் சமாரி அதபத்து 66 பந்துகளில் 113 ரன்களை அடித்தார்.

இதன்மூலம் டி 20 போட்டியில் சதம் அடித்த முதல் இலங்கை பெண் கிரிக்கெட் வீரர் என்ற சாதனை படைத்தார் சமாரி அதபத்து. மேலும் டி 20 தொடரில் சேஸிங்-கின் போது சதம் அடித்த முதல் பெண்கள் அணி கேப்டன் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

டி20 சேஸிங்கில் சதம் அடித்த முதல் கேப்டன் என்ற சாதனையை படைத்த வீரர்!

Also watch

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD