சதம் விளாசினார் கோஹ்லி - ரகானே அரைசதம்

Indian News

Indian News

Author 2019-10-11 13:30:00

img

புனே: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் கேப்டன் கோஹ்லி சதம் அடித்து அசத்தினார். ரகானே அரைசதம் எட்டினார். இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற இந்திய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் புனேயில் நடக்கிறது.'டாஸ்' வென்று களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 273 ரன்கள் எடுத்திருந்தது. கோஹ்லி (63), ரகானே (18) அவுட்டாகாமல் இருந்தனர். ரகானே அரைசதம்இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடக்கிறது. நிதானமாக ரன்கள் சேர்த்த ரகானே, டெஸ்டில் தனது 20வது அரைசதம் எட்டினார். கேப்டன் கோஹ்லி பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்தார். பிலாண்டர் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய கோஹ்லி, டெஸ்ட் அரங்கில் 26வது சதம் எட்டினார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 356 ரன்கள் எடுத்திருந்தது.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN