சாதிப்பாரா 'சாம்பியன்' கோஹ்லி *கங்குலி எதிர்பார்ப்பு

Indian News

Indian News

Author 2019-10-17 04:04:42

img

கோல்கட்டா: ''ஐ.சி.சி., நடத்தும் உலக கோப்பை உள்ளிட்ட பெரிய தொடர்களில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி சாதிக்க வேண்டும்,''என, கங்குலி விருப்பம் தெரிவித்தார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) நடத்தும் தொடர்களில் இந்திய அணி சறுக்குவது வாடிக்கையாக உள்ளது. 2013ல் தோனி தலைமையில் சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. இதற்கு பின் 2015, 19ல் 50 ஓவர் உலக கோப்பை, 2014, 2016ல் 'டுவென்டி-20' உலக கோப்பை, 2017ல் சாம்பியன்ஸ் டிராபியில் சாதிக்க தவறியது. இந்திய பெண்கள் 2017ல் 50 ஓவர் உலக கோப்பை, 2018ல் 'டுவென்டி-20' உலக கோப்பையில் சோபிக்க தவறினர். ஒட்டுமொத்தமாக 7 ஐ.சி.சி., தொடர்களில் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை.

இது குறித்து பி.சி.சி.ஐ., தலைவராக பதவி ஏற்க உள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கூறியது:

இந்திய அணி திறமையானது. ஆனாலும், ஐ.சி.சி., நடத்தும் பெரிய தொடர்களில் சோபிக்காதது ஏமாற்றம். கடந்த ஏழு தொடர்களில் ஒன்றில் கூட கோப்பை வெல்லவில்லை. கேப்டன் கோஹ்லி சாம்பியன் வீரர் என்பதால், இந்த நிலையை மாற்றுவார் என நம்புகிறேன்.

தற்போது 'டுவென்டி-20' போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவு காணப்படுகிறது. இதன் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி(50 ஓவர்) தொடருக்கு பதிலாக 2020, 2021ல் 'டுவென்டி-20' உலக கோப்பை தொடரை நடத்த ஐ.சி.சி., விரும்பலாம்.

சிறந்த தருணம்

பி.சி.சி.ஐ., தலைவராக பதவி ஏற்கும் தருணத்தை காட்டிலும், 1996ல் இந்திய அணிக்காக முதல் டெஸ்ட் விளையாடியதே சிறந்தது. இதைவிட பெரிய தருணம் என் வாழ்க்கையில் கிடையாது. பி.சி.சி.ஐ., தலைவர் என்ற முறையில் நிறைய பொறுப்புகள் காத்திருக்கின்றன. எனது திறமை மீது நம்பிக்கை உள்ளது. கிரிக்கெட் அரங்கில் இந்தியா தான் வல்லரசு. அதற்கு உரிய மதிப்பை கிடைக்க செய்ய பாடுபடுவேன்.

விக்கெட்கீப்பர் விரிதிமான் சகா மீண்டும் நாட்டுக்காக விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. கீப்பிங்கில் அசத்தும் இவர், பேட்டிங்கிலும் கவனம் செலுத்த வேண்டும். இவர், 100 டெஸ்டில் விளையாட விரும்பினால், ரன் மழை பொழிய வேண்டியது அவசியம்.

இவ்வாறு கங்குலி கூறினார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD