சாரா டெய்லர் ஓய்வு

Indian News

Indian News

Author 2019-09-28 00:40:33

img

லண்டன்: இங்கிலாந்து வீராங்கனை சாரா டெய்லர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் சாரா டெய்லர் 30. கடந்த 2006ல் சர்வதேச அரங்கில் காலடி வைத்த இவர், 10 டெஸ்ட் (300 ரன்), 126 ஒருநாள் (4,056), 90 சர்வதேச 'டுவென்டி-20' (2,177) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். ஒட்டுமொத்தமாக 6,533 ரன்கள் எடுத்துள்ள இவர், சர்வதேச அரங்கில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீராங்கனைகள் பட்டியலில் சார்லோட்டி எட்வர்ட்சுக்கு (10,273 ரன்) பின், 2வது இடத்தில் உள்ளார்.

கடந்த 2009ல், 50 ஓவர் உலக கோப்பை (324 ரன்) மற்றும் 'டுவென்டி-20' உலக கோப்பை (199 ரன்) வென்ற இங்கிலாந்து அணிக்கு பேட்டிங்கில் நம்பிக்கை அளித்த சாரா டெய்லர், கடந்த 2017ல் சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பை (50 ஓவர்) தொடரின் அரையிறுதி (54 ரன், எதிர்: தென் ஆப்ரிக்கா) மற்றும் பைனலில் (45 ரன், எதிர்: இந்தியா) இங்கிலாந்தின் வெற்றிக்கு வித்திட்டார்.

விக்கெட் கீப்பராக அசத்திய இவர், 227 விக்கெட் வீழ்ச்சிக்கு வித்திட்டுள்ளார்.

கடைசியாக இவர், கடந்த ஜூலை மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டான்டனில் நடந்த டெஸ்டில் விளையாடினார். சமீபகாலமாக 'பார்மின்றி' தவிக்கும் சாரா டெய்லர், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சாரா கூறுகையில், ''சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுவது கடினமான முடிவு. ஆனால் சரியான நேரத்தில் எடுத்திருப்பதாக உணர்கிறேன். இங்கிலாந்துக்காக விளையாடியதை என்றும் மறக்க முடியாது. ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நன்றி,'' என்றார்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN