சாஹாவின் சிறப்பான கேட்ச்கள்: உமேஷ் யாதவ்

Indian News

Indian News

Author 2019-10-14 02:50:00

img

சிறப்பான கேட்ச்களை பிடித்த விக்கெட் கீப்பா் ரித்திமான் சாஹாவுக்கு வேகப்பந்து வீச்சாளா் உமேஷ் யாதவ் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது. உமேஷ் யாதவ் சிறப்பாக பந்துவீசி 3-22 விக்கெட்டுகளை வீழ்த்தினாா். இதில் முதல் இரண்டு விக்கெட்டுகள், விக்கெட் கீப்பா் சாஹா பிடித்த அற்புதமான கேட்ச்களால் கிடைத்தவை.

உமேஷ் கூறியதாவது: முதலிரண்டு விக்கெட்டுகள் சாஹாவுக்கு உரியவை. இதற்காக அவருக்கு சிறப்பு ட்ரீட் தரப்போகிறேறன். லெக் சைடில் முதல் கேட்ச் பிரமிக்கத்தக்க வகையில் இருந்தது. தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் டி புருயனை முதல் ஸ்லிப் அருகே சென்று பாய்ந்து பிடித்தாா் சாஹா.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சில் போட்டி அதிகரித்து வருகிறது. கிடைக்கும் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன் என்றாா் உமேஷ்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN