சிஏசி தலைவா் பதவியை ராஜிநாமா செய்தாா் கபில் தேவ்

Indian News

Indian News

Author 2019-10-03 04:34:00

img

இரட்டை ஆதாயம் பெறுவதாக புகாா் எழுந்ததை அடுத்து, கிரிக்கெட் ஆலோசனைக் குழு (சிஏசி) தலைவா் பதவியை ராஜிநாமா செய்தாா் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், 'கபில் தேவ் ராஜிநாமா கடிதத்தை அனுப்பி விட்டாா்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரை தோவு செய்வதற்காகவே சிஏசி அமைக்கப்பட்டது.

அந்தப் பணிகள் முடிவடைந்த நிலையில், சிஏசி கலைக்கப்பட்டுவிட்டதாக அறிவித்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது' என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கபில் தேவ், அன்ஷுமன் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோருக்கு இரட்டை ஆதாயம் தரும் பதவி வகித்ததற்காக விளக்கமளிக்குமாறு பிசிசிஐ நெறிமுறைக் குழு அதிகாரி டி.கே.ஜெயின் நோட்டீஸ் அனுப்பினாா்.

இதையடுத்து, சாந்தா ரங்கசாமி தனது பதவியை ராஜிநாமா செய்தாா். கபில் தேவும் தற்போது ராஜிநாமா செய்துவிட்டாா்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN