சூதாட்டம்: அக்தர் ஆதங்கம்

Indian News

Indian News

Author 2019-11-03 01:40:49

img

புதுடில்லி: ''என்னைச்சுற்றி சூதாட்ட நபர்கள் இருந்தனர். எங்கள் அணியை சேர்ந்த 10, எதிரணியை சேர்ந்த 11 என மொத்தம் 21 வீரர்களுக்கு எதிராக விளையாடினேன்,'' என, பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் தெரிவித்தார்.

கடந்த 2010ல் இங்கிலாந்து சென்ற பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. லார்ட்சில் நடந்த நான்காவது டெஸ்டில், 'ஸ்பாட் பிங்சிங்' புகாரில் பாகிஸ்தானின் சல்மான் பட், முகமது ஆமிர், முகமது ஆசிப் சிக்கினர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதித்த தடையை தாண்டி தற்போது ஆமிர் விளையாடி வருகிறார்.

இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் கூறுகையில்,'' சூதாட்டத்தில் ஈடுபட்டு பாகிஸ்தான் அணியை ஏமாற்ற முடியாது என நம்பினேன்.

ஆனால், என்னைச்சுற்றி சூதாட்ட நபர்கள் இருந்தனர். எங்கள் அணியை சேர்ந்த 10, எதிரணியை சேர்ந்த 11 என மொத்தம் 21 வீரர்களுக்கு எதிராக விளையாடினேன். இதில் யார் சூதாட்ட நபர் என யாருக்கு தெரியும். முகமது ஆசிப்பும், ஆமிரும் தங்களின் திறமையை வீணடித்து விட்டனர். இவர்களின் விவகாரம் தெரிந்தபின், மிகவும் வேதனை அடைந்தேன். கோபத்தில் சுவற்றில் நன்றாக குத்துவிட்டேன். சொற்ப அளிவிலான பணத்திற்காக இவர்கள் விலை போய்விட்டனர்,'' என்றார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD