சூறாவளியா எழுச்சி பெற துடிக்கும் இந்திய அணி

srini

srini

Author 2019-11-07 15:22:43

இந்தியா, வங்கதேச அணிகள் மோதும் 2வது டி-20 போட்டி இன்று நடக்கிறது. இதில் முதல் போட்டி தோல்வியிலிருந்து எழுச்சிகண்டு இந்திய அணி வெற்றி பெறும் என நம்பப்படுகிறது.

imgThird party image reference

இந்தியா - வங்கதேசம் இரண்டாவது டி-20

இந்தியா வந்துள்ள வங்கதேச அணி, 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டியில் வெற்றி பெற்ற வங்கதேச அணி தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டி-20 போட்டி, ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது.

புயல் அச்சுறுத்தல்

டெல்லியில் காற்றுமாசு அச்சுறுத்தலைத் தாண்டிப் போட்டி நடத்தப்பட்டது. இதற்கிடையில், இரண்டாவது டி-20 போட்டிக்கு மஹா புயல் அச்சுறுத்தல் சூழ்ந்துள்ளது. இதற்கிடையில் டெல்லி ஆடுகளத்திலிருந்து முற்றிலுமாக மாறுபட்ட ராஜ்கோட் ஆடுகளம், பெரும்பாலும் வங்கதேச பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே இருக்கும் எனத் தெரிகிறது.

தன்னம்பிக்கை

இதோடு கூடுதலாக டி-20 வரலாற்றில் இந்திய அணியை முதல் முறையாக வென்ற உற்சாகத்தில் அந்த அணி இரண்டாவது போட்டியில் வங்கதேச அணி களமிறங்குகிறது. குறிப்பாக அந்த அணியின் நட்சத்திர வீரர்களான ஷாகிப், தமீம் உள்ளிட்டோர் அணியில் இல்லாத நிலையில் இந்த வரலாற்றைப் பதிவு செய்துள்ளது. அதனால் சாத்தியமில்லை என்பது இங்கு எதுவுமில்லை.

மழை குறுக்கீடு...

மஹா புயல் எச்சரிக்கையால், இன்றைய போட்டியில் கண்டிப்பாக மழை குறுக்கீடு இருக்கும் எனத் தெரிகிறது. வங்கதேச அணியைப் பொறுத்தவரையில், அதே வெற்றிக்கூட்டணியுடன் களமிறங்கும் எனத் தெரிகிறது. ஆனால் இந்திய அணியைப் பொறுத்தவரையில், ஆடுகளத்தில் தன்மைக்கு ஏற்ப அணியில் தேவைப்படும் மாற்றம் செய்யப்படும் எனக் கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்தார்.

என்ன மாற்றம்....

இந்திய அணியில் மிடில் ஆர்டர் சொதப்பல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கு தீர்வாக மணீஷ் பாண்டே இருந்தாலும், குர்னால் பாண்டியா, சிவம் துபே கூடுதலாக பவுலிங் செய்வார்கள் என்பதால் பாண்டே தொடர்ந்து பெஞ்ச்சில் அமர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதேநேரம் ராகுல் இடத்தில் சஞ்சு சாம்சன் களமிறக்கப்படலாம் என தெரிகிறது. அதேபோல கடந்த போட்டியில் ரன்களை வாரி வழங்கிய கலீல் அஹமதுக்கு பதிலாக சார்துல் தாகூர் அணியில் சேர்க்கப்படலாம் என தெரிகிறது.

இது வரலாறு...

imgThird party image reference

வங்கதேச அணி இதுவரை நடந்த இந்திய அணிக்கு எதிரான இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடரில் ஒரே ஒருமுறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதுவும் கடந்த 2015 வங்கதேசத்தில் நடந்த 3 போட்டிகள் ஒருநாள் தொடரை வங்கதேச அணி 2-1 என வென்றது.

​புயல் தாக்கம் எப்படி?

மஹா புயல் அச்சுறுத்தல் உள்ள போதும், போட்டி நடக்கவுள்ள ராஜ்கோட் மைதானத்தில் மதிய நேரத்துக்கு மேல் புயல் தாக்கம் குறைந்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதனால் இன்றைய நாள் முழுதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் , மாலையில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் நடந்தது என்ன?

ராஜ்கோட் மைதானத்தில் முன்னதாக இரண்டு சர்வதேச போட்டிகள் நடந்தது. கடந்த 2017ல் நியூசிலாந்து அணி, 2 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது. 2013ல் ஆஸ்திரேலிய அணி, 7 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்தது. இதில் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றியும் பெற்றது.


READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD