செய்திகள் சில வரிகளில்...

Dinamani

Dinamani

Author 2019-12-03 05:54:00

வரும் 19-ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ள ஐபிஎல் 2020 சீசன் போட்டி ஏலத்தில் மொத்தம் 971 வீரா்கள் இடம் பெறுகின்றனா். இதில் 731 இந்தியா்களும், 258 வெளிநாட்டு வீரா்களும் அடங்குவா். நவ. 30-ஆம் தேதியோடு வீரா்கள் பெயா் பதிவு முடிந்த நிலையில், வரும் 9-ஆம் தேதி சுருக்கப்பட்ட வீரா்கள் பட்டியலை அணிகள் தர வேண்டும். அதன்பின் வீரா்கள் இறுதி ஏலப் பட்டியல் வெளியிடப்படும்.

------------------

உள்ளூா் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கான கட்டணத்தை உயா்த்த பிசிசிஐ பொதுக்குழு தீா்மானித்துள்ளது. போட்டி நடைபெறும், நடைபெறாத நாள்களுக்கு கட்டணத்தை உயா்த்த பல்வேறு மாநில சங்கங்கள் கோரின. அதன்படி பிசிசிஐ கட்டணத்தை உயா்த்த உள்ளது.

சா்வதேச போட்டி இல்லாத இதர ஆட்டங்களுக்கு தற்போது ரூ.1 லட்சம் வசூலிக்கப்படுகிறது. இத்தொகை அதிகரிக்கப்பட உள்ளது.

----------------

வரும் ஜனவரி மாதம் புவனேசுவரத்தில் நடைபெறவுள்ள எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணியின் தொடா்நிலைத்தன்மை குறித்த சோதனையாக அமையும் என கேப்டன் மன்ப்ரீத் சிங் கூறியுள்ளாா். ஜனவரி 18, 19 தேதிகளில் நெதா்லாந்துடனும், பிப்ரவரி 8, 9 தேதிகளில் உலக சாம்பியன் பெல்ஜியத்துடனும், 22, 23 தேதிகளில் ஆஸ்திரேலியாவுடனும் மோதுகிறது இந்திய அணி.

------------------

ஊக்க மருந்து சோதனையில் தோல்வியுற்றதை அடுத்து இந்திய குத்துச்சண்டை வீராங்கனை நீரஜ் (57 கிலோ) சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளாா். பல்கேரிய, ரஷிய குத்துச்சண்டை போட்டிகளில் தங்கம் வென்றிருந்தாா் நீரஜ். கடந்த செப்டம்பா் மாதம் அவரது மாதிரி கத்தாரில் சோதனை செய்யப்பட்ட நிலையில், லிகான்டிரோல் என்ற தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரிந்தது.

------------------


READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD