சையத் முஷ்டாக் அலி டிராபி : கேரளாவை வீழ்த்திய தமிழ்நாடு

Indian News

Indian News

Author 2019-11-09 00:16:21

img

இந்தியாவில் நடைபெறும் முன்னணி டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபி கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. இந்த தொடரில் தும்பாவில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு – கேரளா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கேரளா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

தொடர்ந்து முதலில் களமிறங்கிய தமிழ்நாடு அணியில், தொடக்க வீரர்களாக முரளி விஜய், ஜெகதீசன் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ஜெகதீசன் 8 ரன்னிலும், முரளி விஜய் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய அபரஜித் 35 ரன்களும், தினேஷ் கார்த்திக் 33 ரன்களும், விஜய் சங்கர் 25 ரன்களும், ஷாருக் கான் 28 ரன்களும், முகமது 11 பந்தில் 34 ரன்களும் எடுத்தனர்.

நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில், தமிழ்நாடு அணி 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது.

இதனையத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கேரளா அணி 20 ஓவர்களில் 137 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் தமிழ்நாடு 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN