சைவம் வசம் கோஹ்லி

Indian News

Indian News

Author 2019-10-26 05:40:34

img

புதுடில்லி: ''சைவ உணவுக்கு மாறிய பின், வாழ்க்கை சிறப்பாக உள்ளது,'' என இந்திய அணி கேப்டன் கோஹ்லி தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட்டின் மூன்று வித அணியின் கேப்டன் கோஹ்லி 30. உடற்தகுதியை சிறப்பாக பராமரிப்பார். தென் ஆப்ரிக்க தொடர் முடிந்த நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான 'டுவென்டி-20' தொடரில் இருந்து இவருக்கு ஓய்வு தரப்பட்டது.

இதனிடையே உலகின் பிரபல விளையாட்டு நட்சத்திரங்களின் சைவ உணவு பழக்கங்கள் குறித்த 'தி கேம் சேஞ்சர்ஸ்' என்ற ஆவணப் படத்தை பார்த்து ரசித்தார் கோஹ்லி. இதுகுறித்து தனது 'டுவிட்டர்' செய்தியில்,'தி கேம் சேஞ்சர்ஸ்' என்ற ஆவணப்படத்தை பார்த்தேன்.

என்னை வியக்கவைத்தது. சைவ உணவுகளை பின்பற்றும் விளையாட்டு நட்சத்திரங்களை பார்த்த போது, உடற்தகுதியை பராமரிப்பது குறித்து நான் நம்பிக் கொண்டிருந்த கட்டுக்கதைகளை தகர்க்க வைத்தனர். சைவ உணவுக்கு மாறிய பிறகு, எனது வாழ்க்கையில் இவ்வளவு சிறப்பாக இதற்கு முன் உணர்ந்தது இல்லை,' என தெரிவித்துள்ளார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD