ஜாம்பவான்களின் சாதனைகளை முறியடித்த விராட் கோஹ்லி

Indian News

Indian News

Author 2019-10-12 17:52:39

img

புனே: தென் ஆப்ரிக்க அணியுடனான 2வது டெஸ்டில் பட்டைய கிளப்பிய கேப்டன் கோஹ்லி இரட்டை சதன் விளாசினார். இதன் மூலம் கிரிக்கெட்டில் ஜாம்பவான்களின் சாதனையை முறியடித்தார். இந்தியா-தென் ஆப்ரிக்க இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 273 ரன் எடுத்திருந்தது. கோஹ்லி 63 ரன், ரகாகே 18 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இருவரும் நேற்று 2வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். சிறப்பாக ஆடிய ஜோஹ்லி 26வது சதத்தை அடித்து அசத்தினார். நிதானமாக விளையாடிய ரகானோ 59 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 178 ரன் சேர்த்தது. 6வது வீரராக களமிறங்கிய ஜடேஜா தனது இயல்பான ஆட்டத்தால் ரசிகர்களை குஷிப்படுத்தினர்.

ஒருபக்கம் கோஹ்லி தென் ஆப்ரிக்க பவுலர்களை துவம்சம் செய்தார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் தென் ஆப்ரிக்க பவுலர்கள் திணறினர். அபராமாக ஆடிய ஜடேஜா அரை சதம் அடித்தார். தொடர்ந்து, கோஹ்லி தனது 7வது இரட்டை சதத்தை அடித்து சாதனை படைத்தார். தொடர்ந்து, சிக்கர்கள் மற்றும் பவுண்டரிகளாக பறக்கவிட்ட ஜடேஜா 91 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இந்திய அணி 5 விக்கெடுக்கு 601 ரன் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. கோஹ்லி 251 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 7 இரட்டை சதம் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இந்திய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார் கோஹ்லி. முன்னதாக, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விரேந்திர சேவாக் தலா 6 இரட்டை சதம் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் (12), இலங்கை வீரர் குமார் சங்கக்கரா (11) வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா (9) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர். நேற்றைய போட்டியில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் கோஹ்லி டெஸ்ட் கிரிக்கெட்டில் 138 இன்னிங்சில் 7000 ரன்களை கடந்து புதிய மைல்கல்லை எட்டினார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீசின் கேரி சோபர்ஸ், குமார் சங்ககராவின் சாதனையை சமன் செய்துள்ளனர். இருவரும் 138 இன்னிங்சில் 7000 ரன்களை கடந்துள்ளனர். இந்த பட்டியலில் வாலி ஹம்மண்ட் (131 இன்னிங்சிஸ்), வீரேந்திர சேவாக் (134 இன்னிங்கிஸ்), சச்சின் டெண்டுல்கர் (136 இன்னிங்சிஸ்) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக அதிகமுறை 150+ ரன் அடித்த வீரர்கள் வரிசையில் கோஹ்லி முதலிடம் பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் 8 முறை 150+ ரன் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க், இலங்கை மகிளா ஜெயவர்தனே, வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா, தென் ஆப்ரிக்காவின் கிரீம் ஸ்மித் ஆகியோர் 7 முறை 150+ ரன்களை எடுத்து 3வது இடத்தை பகிர்ந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் கிரிக்கெட் ஜாம்பவான்களின் சாதனையை அடுத்தடுத்து கோஹ்லி முறியடித்துள்ளார். முன்னதாக, முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த ரோகித் ஷர்மாவுன் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD