ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது சிங்கப்பூர்

Indian News

Indian News

Author 2019-10-01 04:07:50

img

சிங்கப்பூர்: சர்வதேச 'டுவென்டி-20' போட்டியில் அசத்திய சிங்கப்பூர் அணி, 4 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்திய புதிய வரலாறு படைத்தது.

சிங்கப்பூரில், முத்தரப்பு சர்வதேச 'டுவென்டி-20' தொடர் நடக்கிறது. இதில் ஜிம்பாப்வே, நேபாளம், சிங்கப்பூர் அணிகள் பங்கேற்கின்றன. மூன்றாவது லீக் போட்டியில் சிங்கப்பூர், ஜிம்பாப்வே அணிகள் மோதின. மழையால் தலா 18 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது.

'டாஸ்' வென்று முதலில் 'பேட்டிங்' செய்த சிங்கப்பூர் அணிக்கு ரோகன் ரங்கராஜன் (39), சுரேந்திரன் சந்திரமோகன் (23) நல்ல துவக்கம் தந்தனர். டாம் டேவிட் (41), மன்பிரீத் சிங் (41) கைகொடுக்க சிங்கப்பூர் அணி, 18 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்தது.

சவாலான இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணிக்கு ரெஜிஸ் சகப்வா (48), கேப்டன் சீன் வில்லியம்ஸ் (66), டினோடென்டா முடாம்போட்ஜி (32) ஆறுதல் அளித்தனர்.

ஜிம்பாப்வே அணி 18 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 177 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. இதன்மூலம் சர்வதேச 'டுவென்டி-20' அரங்கில், ஐ.சி.சி., உறுப்பினராக முழு அங்கீகாரம் பெற்ற ஒரு அணிக்கு எதிராக தனது முதல் வெற்றியை பதிவு செய்த சிங்கப்பூர் அணி புதிய சாதனை படைத்தது.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN