ஜீப் கழுவிய தோனி

Indian News

Indian News

Author 2019-10-25 06:06:13

img

ராஞ்சி: ராஞ்சியில் உள்ள தனது வீட்டில், மகள் ஜிவாவுடன் இணைந்து ஜீப் கழுவினார் தோனி.

இந்திய அணி 'சீனியர்' விக்கெட் கீப்பர் தோனி 38. உலக கோப்பை தொடருக்குப் பின் போட்டிகளில் பங்கேற்காமல் உள்ளார். 15 நாட்கள் ராணுவத்தில் பணி செய்தார். சமீபத்தில் ராஞ்சியில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை பார்க்க, சமீபத்தில் பஞ்சாப்பில் இருந்து வாங்கிய தனது பச்சை நிற 'நிசான் ஜோங்கா' ஜீப்பில் வந்து கலக்கினார்.

மைதானத்தில் சக வீரர்கள், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை சந்தித்து திரும்பினார். வரும் வங்கதேச தொடரில் பங்கேற்பார் என நம்பப்பட்டது. மாறாக இதிலும் இடம் பெறவில்லை.

இதனிடையே மகள் ஜிவாவுடன் சேர்ந்து, 'ஜோங்கா' காரை தோனி கழுவினார்.

இந்த வீடியோவை தனது 'இன்ஸ்டாகிராம்' சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட தோனி,'வாகனம் பெரியது என்பதை உணரும் போது, சிறிய அளவிலான உதவியும், மிகப்பெரியது தான்,' என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN