ஞாபகம் வருதே... * தோனியின் புதிய 'வீடியோ'
புதுடில்லி: தோனி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த தெருவில் கிரிக்கெட் விளையாடும் வீடியோ வைரல் ஆக பரவி வருகிறது.
தோனி எங்கே உள்ளார், என்ன செய்கிறார், எப்போது ஓய்வு பெறுவார் என பலவிதமான கேள்விகளுக்கு பதில் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் தோனிக்கு கிரிக்கெட் நினைவுகள் இன்னும் ஊசலாடிக் கொண்டு தான் உள்ளது போல.
தனது 'இன்ஸ்டாகிராம்' சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் தெருவில் கிரிக்கெட் விளையாடும் ஒருவர், போல்டான போதும், இது அவுட் இல்லை என, வாதிடுகிறார். இதுகுறித்து தோனி கூறுகையில்,'' முதல் பந்தில் அவுட்டான போதும், இது 'டிரையல்' பந்து என விவாதிப்பது, அம்பயர் தீர்ப்பு தான் இறுதி என்பது போன்ற சம்பவங்கள் எனது பள்ளிக்கால கிரிக்கெட்டை நினைவு படுத்துகிறது.