டாஸ் வென்றது இந்தியா: முதலில் பேட்டிங்

Puthiyathalaimurai

Puthiyathalaimurai

Author 2019-10-02 21:50:59

img

விசாகப்பட்டினத்தில் இன்னும் சற்றுநேரத்தில் தொடங்கவுள்ள தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியக் கேப்டன் விராட் கோலி பேட்டிங் செய்ய தீர்மானித்தாரர்.

முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் இதுவரை 36 டெஸ்ட் ஆட்டங்களில் மோதி உள்ளன. இதில், தென்னாப்பிரிக்கா 15 போட்டியிலும், இந்தியா 11 போட்டியிலும் வென்றுள்ளன. 10 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன.

இன்று முதல் 6 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் முதல் டெஸ்ட் தொடரும் 10ம் தேதி முதல் 14ஆம் தேதி வரை புனேயில் இரண்டாவது டெஸ்ட் தொடரும் 19ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை ராஞ்சியில் மூன்றாவது டெஸ்ட் தொடரும் நடைபெற உள்ளது

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN