டில்லி...யார் 'கில்லி' * அசத்துமா இந்திய அணி

Indian News

Indian News

Author 2019-11-03 07:41:00

img

புதுடில்லி: இந்தியா, வங்கதேச அணிகள் மோதும் முதல் 'டுவென்டி-20' போட்டி இன்று டில்லியில் நடக்கிறது. ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கும் இந்திய அணி, தொடரை வெற்றியுடன் துவக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா வந்துள்ள வங்கதேச அணி மூன்று போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது. கேப்டன் கோஹ்லிக்கு ஓய்வு தரப்பட்டதால் இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக களமிறங்குகிறார்.

ரோகித் நம்பிக்கை

துவக்கத்தைப் பொறுத்தவரையில் டெஸ்ட் தொடரில் ரன் மழை பொழிந்த ரோகித், 'டுவென்டி-20'யிலும் அசத்த முயற்சிக்கலாம். உலக கோப்பை தொடரில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்ட ஷிகர் தவான், இன்னும் பெரியளவு ரன்கள் எடுக்கவில்லை.

விஜய் ஹசாரே தொடரில் 7 போட்டியில் ஒரு அரைசதம் மட்டும் அடித்தார்.

இத்தொடரில் மீண்டு வந்தால் நல்லது. மிடில் ஆர்டரில்' லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட இளம் வீரர்களை மட்டுமே நம்ப வேண்டிய நிலையில் உள்ளது. ஷிவம் துபே அறிமுகம் ஆனால் மணிஷ் பாண்டே இடம் பெற முடியாது. பின் வரிசையில் விக்கெட் கீப்பராக ரிஷாப் பன்ட் வருவார் என்பதால் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு சிக்கல் தான்.

அனுபவம் குறைவு

பவுலிங்கை பொறுத்தவரையில் கலீல் அகமது, தீபக் சகார், ஷர்துல் தாகூர் என புதிய கூட்டணி களமிறங்குகிறது. மற்றபடி 'ஆல் ரவுண்டர்கள்' வரிசையில் குர்னால் பாண்ட்யா, தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் என இருவரும் இடம் பெறுவர் என்பதால் இந்திய அணி நம்பிக்கையுடன் காத்திருக்கிறது. சுழலில் சகால் மட்டும் சேர்க்கப்படலாம். ராகுல் சகார் வாய்ப்பு சந்தேகம் தான்.

சாகிப் இல்லை

சமீபத்திய போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் வங்கதேச அணி, ஆசிய அளவில் இலங்கையை பின் தள்ளி எழுச்சி பெற்றுள்ளது. சமீபத்திய முத்தரப்பு 'டுவென்டி-20' தொடரில் வங்கதேச அணி 4 போட்டியில் 3ல் வெற்றி பெற்றது. எனினும் ஆப்கானிஸ்தானிடம் தோற்றது.

தவிர சாகிப் அல் ஹசன் தடையில் சிக்கியது, தமிம் இக்பால் இல்லாதது அணிக்கு நெருக்கடி தரலாம். புதிய கேப்டன் மகமதுல்லா ரியாத், 'சீனியர்' முஷ்பிகுர், சவுமியா சர்கார், லிட்டன் தாஸ் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் இந்தியாவுக்கு நெருக்கடி தர முயற்சிக்கலாம். பவுலிங்கில் இளம் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிஜுர் ரஹ்மான், ஷபியுல் இஸ்லாம், ஆபிப் ஹொசைன் கைகொடுக்க காத்திருக்கின்றனர்.

8.66

கடந்த 2016 உலக கோப்பை தொடருக்குப் பின், 'டுவென்டி-20' போட்டிகளில் இந்திய அணியின் ரன்ரேட் சராசரியாக ஒரு ஓவருக்கு 8.66 என உள்ளது.

80

இந்திய அணிக்காக ரோகித் சர்மா 15 'டுவென்டி-20' போட்டிகளில் கேப்டனாக களமிறங்கினார். இதில் இந்தியா 12ல் வென்றது. 3ல் தோற்றது. வெற்றி சதவீதம் 80.00 ஆக உள்ளது.

99

இந்திய அணிக்காக அதிக 'டுவென்டி-20' போட்டிகளில் பங்கேற்ற வீரர்களில் தோனி (98), ரோகித் (98) முன்னணியில் உள்ளனர். இன்று களமிறங்கும் ரோகித், அதிக போட்டிகளில் (99வது) பங்கேற்ற இந்திய வீரர்களில் 'நம்பர்-1' இடம் பெறலாம். ரெய்னா (78), கோஹ்லி (72) அடுத்த இரு இடத்தில் உள்ளனர்.

சிக்கல் தீருமா

'டுவென்டி-20' போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்து அதிக ரன்கள் குவிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் இந்தியா செயல்படுகிறது. சமீபத்திய தென் ஆப்ரிக்க தொடரில் 'சேஸ்' செய்ய சாதகமான ஆடுகளத்திலும் இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து தோற்றது.

* 'டாப் ஆர்டர்' சொதப்பினால், பின் வரிசை வீரர்களும் ஏமாற்றுகின்றனர். இந்த திட்டம் தொடரும் பட்சத்தில் 'மிடில் ஆர்டர்' சிக்கலை சரி செய்ய வேண்டும்.

கோஹ்லியை முந்துவாரா

பயிற்சியின் போது பந்து தாக்கி காயமடைந்து மீண்ட ரோதித் இன்று களமிறங்குகிறார். இதுவரை 98 போட்டியில் 2,443 ரன் குவித்துள்ள இவர், இன்று 8 ரன் எடுக்கும் பட்சத்தில் கோஹ்லியை (2,450 ரன்) முந்தி, அதிக ரன் குவித்த இந்திய வீரர்களில் 'நம்பர்-1' ஆகலாம்.

காற்றுமாசு தொல்லை

தீபாவளிக்குப் பின் டில்லியில் காற்று மாசுபாடு அளவு அதிகரித்துள்ளது. இதனால் பொது சுகாதார எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. கட்டட பணிகளுக்கு தடை நீடிக்கிறது. இருப்பினும் காற்று மாசுபாடு அளவு அதிகரித்து, நேற்றைய நிலவரப்படி மிக மோசமான நிலையை எட்டியது.

இருப்பினும் போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என கூறப்பட்டுள்ளது. வீரர்கள் 'மாஸ்க்' அணிந்து விளையாடுவர் எனத் தெரிகிறது.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN