டி20 உலகக் கோப்பை ஸ்காட்லாந்து, ஓமன் தகுதி

Indian News

Indian News

Author 2019-11-01 13:28:05

img

துபாய்

சர்வதேச டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாட ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2020-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி முதல் நவம்பர் 15-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இதில் 10 அணிகள் நேரடியாக விளையாடும் தகுதியைப் பெற்றுள்ளன. மீதமுள்ள 6 நாடுகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும் என அறிவிக்கப்பட்டது. இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

இதில் இலங்கை, வங்கதேசம் தவிர மற்ற 8 அணிகளும் நேரடியாக 2-வது சுற்றில் விளையாடும்.

இந்நிலையில் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகின்றன. இதில் 14 அணிகள் பங்கேற்றன. இதிலிருந்து 6 நாடுகள் உலகக் கோப்பைப் போட்டிக்குச் செல்லும். பப்புவா நியூகினியா, அயர்லாந்து, நெதர்லாந்து, நமீபியா ஆகிய 4 நாடுகள் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன. இந்நிலையில் நேற்றுமுன்தின் நடைபெற்ற ஆட்டத்தின் மூலம் ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய அணிகளும் உலகக் கோப்பை போட்டிக்குள் நுழைந்தன. கடைசி இரண்டு அணிகளாக இந்த அணிகள் தேர்வு பெற்றன.

ஹாங்காங்குக்கு எதிரான போட்டியில் ஓமன் 12 ரன் வித்தியாத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஓமன் அணி முன்னேறியுள்ளது. மற்றொரு ஆட்டத்தில் ஐக்கியஅரபு அமீரக அணியை 90 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணி வென்று உலகக் கோப்பை போட்டிக்கு முன்னேறியது.

- பிடிஐ

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD