டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு வந்த சோதனை

Indian News

Indian News

Author 2019-11-09 00:24:10

img

உலக கிரிக்கெட் டி20 போட்டிகளில் நம்பர் ஒன் அணியாக திகழ்ந்து வரும் பாகிஸ்தான், 2019-ல் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய பின்னடைவாக உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று நடைபெற்ற டி20 கிரிக்கெட்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இதன் மூலம் கடந்த 10 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

மேலும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்தது. இதனையடுத்து 3-வது போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் தோல்வியடைந்தது. கடந்த மாதம் பாகிஸ்தானில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஒயிட் வாஷ் ஆனது.

இன்றுடன் முடிவடைந்த ஆஸ்திரேலியா தொடரில் 0-2 எனத் தோல்வியடைந்தது. முதல் போட்டி டிராவில் முடிந்தது. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் ஒரு வருடம் கூட இல்லாத நிலையில் 10-ல் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால், அந்த அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD