டி20 கேப்டனாக ரோகித் சர்மா : யுவராஜ்சிங் யோசனை

Indian News

Indian News

Author 2019-09-28 00:36:25

img

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னனி தொடக்க ஆட்டகாரர் ரோகித் சர்மா. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் இவர், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். இவரது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் மூன்று முறை சாம்பியன்ஸ் பட்டம் வென்றது.

இந்நிலையில் இந்திய அணியில் இவரை கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், டி20 கிரிக்கெட்டிற்கு ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், விராட் கோலி வேலைப்பளு அதிகம் என்று உணர்ந்தால், மற்றொருவரிடம் டி20 அணி கேப்டன் பொறுப்பை கொடுக்க முயற்சி செய்யலாம்.

ரோகித் சர்மா மிகவும் வெற்றிகரமான கேப்டன். விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன். அவரது வேலைப்பளுவை எப்படி நிர்வகிப்பார்?. இதுகுறித்து அணி நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும்'' என தெரிவித்துள்ளார்

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN