டீன் எல்கரை சாதனை விக்கெட்டாக வீழ்த்திய ஜடேஜா

Indian News

Indian News

Author 2019-10-05 00:49:03

img

விசாகப்பட்டினம்

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 502 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்ரிக்க அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளும், ஜடேஜா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இந்நிலையில்இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இரண்டு விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் ஜடேஜா, 2-வது விக்கெட்டாக டீன் எல்கரை வீழ்த்தியபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் 200-வது விக்கெட்டை பதிவு செய்தார்.

தனது 44வது டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள ஜடேஜா வ விரைவாக 200 விக்கெட்டுக்கள் வீழ்த்திய முதல் இடது கை பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

மேலும், 2-வது இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அஸ்வின் 37 டெஸ்டில் 200 விக்கெட்டுக்கள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD