டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா நிதான ஆட்டம்...!

News 7

News 7

Author 2019-10-20 10:33:33

img

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா, ரஹானேவின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 300 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ரோகித் சர்மாவின் சதத்தால் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், சிறப்பாக ஆடி வந்த ரஹானேவும் சதமடித்து அசத்தினார். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் தனது 11வது சதத்தை நிறைவு செய்தார்.

மறுபுறம் சிக்சர்கள், பவுண்டரிகளாக விளாசி வந்த ரோகித் சர்மா, 199 ரன்கள் எடுத்து கடந்து விளையாடி வருகிறார். இதன் காரணமாக இந்திய அணி 4 விக்கெட்டை இழந்து 357 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD