டெஸ்ட் கிரிக்கெட் : ரோகித் சர்மா முதல் இரட்டை சதம்

Indian News

Indian News

Author 2019-10-20 15:05:06

img

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் அபாரமாக ஆடிய ரோகித் சர்மா, கிரிக்கெட் அரங்கில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். 212 ரன்கள் எடுத்த நிலையில், ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.
டெஸ்ட் தொடரில், இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், 3வது டெஸ்ட் ராஞ்சியில் துவங்கி நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். மயங்க் அகர்வால், 10 ரன்களில் வெளியேற, ரோகித் சர்மா மறுபக்கம் அதிரடி காட்டினார். புஜாரா, ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

கேப்டன் கோலி 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ரஹானே நிதானமாக ஆடி வந்தார். 58 ஓவர்கள் வீசப்பட்டிருந்த நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்படவே, மழையும் பெய்ய துவங்கியது. இதன்காரணமாக, முதல் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

ரோகித் 116 ரன்களுடனும், ரஹானே 83 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இரண்டாம் நாள் ஆட்டம், தற்போது நடைபெற்று வருகிறது.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹெச் டி சேனலில் போட்டியை நேரடியாக காணலாம். ஆன்லைனில் ஹாட் ஸ்டாரில் போட்டியைக் காணலாம். தவிர, இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் லைவ் ஸ்கோர் கார்டை நீங்கள் கண்டு ரசிக்கலாம்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD