தமிம் இக்பால் விலகல்

Indian News

Indian News

Author 2019-10-26 21:47:35

img

தாகா: இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து வங்கதேசத்தின் தமிம் இக்பால் விலகினார். இவருக்கு பதிலாக இம்ருல் கெய்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா வரவுள்ள வங்கதேச அணி, மூன்று சர்வதேச 'டுவென்டி-20', இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் 'டுவென்டி-20' வரும் நவ. 3ல் டில்லியில் நடக்கவுள்ளது. மீதமுள்ள போட்டிகள் ராஜ்கோட் (நவ. 7), நாக்பூர் (நவ. 10) நடக்கவுள்ளன. இரண்டு டெஸ்ட் போட்டிகள் இந்துார் (நவ. 14-18), கோல்கட்டாவில் (நவ. 22-26) நடக்கும்.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 'டுவென்டி-20' தொடருக்கான வங்கதேச அணியில் தமிம் இக்பால் இடம் பிடித்திருந்தார்.

விலா எலும்பு பகுதியில் காயமடைந்திருந்த இவர், நீண்ட நாட்களுக்கு பின் அணிக்கு திரும்பினார். ஆனால் இவரது மனைவிக்கு 2வது பிரசவம் நடக்கவுள்ளதால், இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து விலக முடிவு செய்தார். இவருக்கு பதிலாக இம்ருல் கெய்ஸ் 'டுவென்டி-20' தொடருக்கு மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய தொடரில் இருந்து விலகிய 2வது வங்கதேச வீரரானார் தமிம் இக்பால். ஏற்கனவே 'ஆல்-ரவுண்டர்' முகமது சைபுதின் (முதுகு பகுதி) காயத்தால் விலகினார். இவருக்கு இன்னும் மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD