தமிழகம் நுாறு சதவீத வெற்றி *விஜய், அபினவ் விளாசல்

Indian News

Indian News

Author 2019-10-17 04:09:33

img

ஜெய்ப்பூர்: விஜய் ஹசாரே தொடரில் லீக் சுற்றில் நுாறு சதவீத வெற்றி பெற்றது தமிழக அணி. நேற்று நடந்த கடைசி போட்டியில் குஜராத்தை 78 ரன்னில் வீழ்த்தியது.

விஜய் ஹசாரே டிராபி தொடரின் 'சி' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், குஜராத் மோதின. முதலில் விளையாடிய தமிழக அணிக்கு அபினவ் முகுந்த் (79), முரளி விஜய் (94) ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. விஜய் சங்கர் 23 ரன் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 42 ரன் எடுக்க, தமிழக அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்தது.

குஜராத் அணிக்கு கேப்டன் பார்த்திவ் படேல் (6), பிரியங்க் (12) கைவிட்டனர், பார்கவ் 44, அக்சர் படேல் 55 ரன்கள் எடுத்த போதும் வெற்றிக்கு போதவில்லை.

குஜராத் அணி 42.2 ஓவரில் 196 ரன்னுக்கு சுருண்டது. தமிழக அணி 78 ரன்னில் வெற்றி பெற்றது. தமிழகத்தின் முகமது 3, முருகன் அஷ்வின் 2 விக்கெட் சாய்த்தனர்.

லீக் சுற்றில் 9 போட்டியிலும் சாதித்த தமிழக அணி நுாறு சதவீத வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD