தமிழக அணி இமாலய வெற்றி

Indian News

Indian News

Author 2019-10-13 00:35:59

img

ஜெய்ப்பூர்: மத்திய பிரதேசம் அணிக்கு எதிரான விஜய் ஹசாரே டிராபி லீக் போட்டியில் அசத்திய தமிழக அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. அபாரமாக ஆடிய அபினவ் முகுந்த் சதம் கடந்தார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் தொடருக்கான 'சி' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், மத்திய பிரதேசம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ம.பி., அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது. தமிழக அணிக்கு முரளி விஜய் (24), பாபா அபராஜித் (6) சோபிக்கவில்லை. அபாரமாக ஆடிய அபினவ் முகுந்த், 139 பந்தில், 2 சிக்சர், 17 பவுண்டரி உட்பட 147 ரன்கள் எடுத்தார்.

மறுமுனையில் அசத்திய விஜய் சங்கர் (90), கேப்டன் தினேஷ் கார்த்திக் (65*) கைகொடுத்தனர்.

தமிழக அணி 50 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 360 ரன்கள் குவித்தது.

கடின இலக்கை விரட்டிய ம.பி., அணிக்கு கேப்டன் நமன் ஓஜா (24), யாஷ் துபே (28) ஏமாற்றினர். முருகன் அஷ்வின் 'சுழலில்' ஆனந்த் பைஸ் (34), ரிஷாப் சவுகான் (14), ஈஷ்வர் பாண்டே (0) சிக்கினர்.

ம.பி., அணி 28.4 ஓவரில், 149 ரன்களுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. தமிழகம் சார்பில் முருகன் அஷ்வின் 3 விக்கெட் கைப்பற்றினார். இது, தமிழக அணிக்கு தொடர்ச்சியாக கிடைத்த 8வது வெற்றி.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN