தமிழக அணி மீண்டும் வெற்றி

Indian News

Indian News

Author 2019-11-09 09:30:00

img

திருவனந்தபுரம்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான சையது முஷ்தாக் அலி டிராபி லீக் போட்டியில் அசத்திய தமிழக அணி 39 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த சையது முஷ்தாக் அலி டிராபி 'டுவென்டி-20' கிரிக்கெட் தொடருக்கான லீக் போட்டியில் தமிழகம், ராஜஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ராஜஸ்தான் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.தமிழக அணிக்கு முரளி விஜய் (35), ஜெகதீசன் (48), கேப்டன் தினேஷ் கார்த்திக் (48) நம்பிக்கை அளித்தனர். விஜய் சங்கர் (15) நிலைக்கவில்லை. தமிழக அணி 20 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்தது. ஷாருக்கான் (16) அவுட்டாகாமல் இருந்தார். ராஜஸ்தான் சார்பில் ஆகாஷ் சிங் 2 விக்கெட் வீழ்த்தினார்.கிஷோர் அசத்தல்: சவாலான இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு சாய் கிஷோர் தொல்லை தந்தார். இவரது 'சுழலில்' மனேந்தர் சிங் (0), அன்கித் லம்பா (5), ஆதித்யா (9) சிக்கினர். கேப்டன் மஹிபால் (32) ஆறுதல் தந்தார். ராஜஸ்தான் அணி 20 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 116 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. தமிழகம் சார்பில் சாய் கிஷோர் 3 விக்கெட் கைப்பற்றினார்.முதல் போட்டியில் கேரளாவை வீழ்த்திய தமிழக அணி, தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்தது.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN