தமிழக அணி வெற்றி: தினேஷ் கார்த்திக் அரைசதம்

Indian News

Indian News

Author 2019-09-25 02:17:20

img

ஜெய்ப்பூர்: விஜய் ஹசாரே டிராபி லீக் போட்டியில் தினேஷ் கார்த்திக், முகுந்த், அபராஜித் அரைசதம் கைகொடுக்க, தமிழக அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது.

இந்தியாவின் முன்னணி ஒருநாள் தொடர் விஜய் ஹசாரே டிராபி. இதன் 18 வது சீசன் தற்போது நடக்கிறது. 22 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடக்கின்றன. 'சி' பிரிவில் இடம் பெற்ற தமிழக அணி, நேற்று ராஜஸ்தானை சந்தித்தது.

'டாஸ்' வென்ற தமிழக அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் 'பீல்டிங்' தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணியின் கேப்டன் லாம்ரர் (11) கைவிட, அசோக் மேனரியா (35) சற்று உதவினார்.

அர்ஜித் குப்தா 77 ரன்கள் எடுத்தார். பின் வரிசையில் ராகுல் சகார், 25 பந்தில் 48 ரன்கள் எடுக்க ராஜஸ்தான் அணி, 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 261 ரன்கள் எடுத்தது. தமிழகம் சார்பில் விக்னேஷ் 3, முகமது 2, சாய் கிஷோர் 2 விக்கெட் சாய்த்தனர்.

மூன்று அரைசதம்

பின் களமிறங்கிய தமிழக அணிக்கு ஜெகதீசன் (7) தடுமாறினார். இரண்டாவது விக்கெட்டுக்கு அபினவ் முகுந்த், பாபா அபராஜித் ஜோடி 114 ரன்கள் சேர்த்தது. அரைசதம் எட்டிய அபினவ் முகுந்த் 75 ரன்னுக்கு அவுட்டானார். அபராஜித் 52 ரன்கள் எடுத்தார். தினேஷ் கார்த்திக் (52), ஷாருக்கான் (48) இணைந்து 5வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்து அவுட்டாகாமல் இருந்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர். தமிழக அணி 48 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 262 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN