தமிழக கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவர் ரூபா

Indian News

Indian News

Author 2019-09-26 02:52:19

img

சென்னை: தமிழக கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவராக தேர்வு செய்யப்படுகிறார் ரூபா குருநாத்.

இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) புதிய விதிகளின் படி மாநில சங்கங்களுக்கு வரும் அக்., 4ம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும். இதன் படி தமிழக கிரிக்கெட் சங்கத்தின் (டி.என்.சி.ஏ.,) நிர்வாகிகள் தேர்தலை நடத்த சுப்ரீம் கோர்ட் கடந்த வாரம் அனுமதி கொடுத்தது. இருப்பினும் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என தெரிவித்தது.

இதனிடையே டி.என்.சி.ஏ.,யின் புதிய தலைவராக ரூபா குருநாத் மனு தாக்கல் செய்தார். கடைசி நாளான நேற்று மாலை 5:00 மணி வரை வேறு யாரும் இப்பதவிக்கு போட்டியிடவில்லை.

இதையடுத்து புதிய தலைவராக ரூபா குருநாத், இன்று நடக்கவுள்ள 87வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் போட்டியின்றி தேர்வாகிறார்.

இவர் தற்போதைய தலைவர் சீனிவாசனின் மகள். தவிர, ஐ.பி.எல்., தொடரில் பெட்டிங் பிரச்னையில் சிக்கி, வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட குருநாத் மெய்யப்பனின் மனைவி. மற்றபதவிகளுக்கு தேர்வாக உள்ளவர்கள்.

* துணைத் தலைவர்கள்: சீனிவாசராஜ் (நகரம்), அசோக் சிகாமணி (மாவட்டம்).

* கவுரவ செயலர்: ராமசாமி

* கவுரவ இணைச் செயலர்: சங்கர்

* கவுரவ துணைச் செயலர்: வெங்கட்ராமன்

* கவுரவ பொருளாளர்: பார்த்தசாரதி

இதனை டி.என்.சி.ஏ., தேர்தல் அதிகாரியான ஓய்வு பெற்ற சந்திரசேகரன் அறிவித்தார்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN