தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ஆனார் ரூபா குருநாத்!

Puthiyathalaimurai

Puthiyathalaimurai

Author 2019-09-27 12:04:01

img

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக ரூபா குருநாத் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

’இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகத்தில், 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் பதவியில் இருக்கக்கூடாது, ஒருவர் தொடர்ந்து 2 முறை பதவி வகித்தால் ஒருவருட இடைவெளிக்கு பின்பே மீண்டும் பதவிக்கு வர வேண்டும், ஒரே நேரத்தில் இரண்டு பதவி வகிக்கக்கூடாது’ என்பது உட்பட பல புதிய விதிமுறைகளை லோதா கமிட்டி பரிந்துரை செய்திருந்தது. அதன்படி, மாநில கிரிக்கெட் சங்கங்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல், அடுத்த மாதம் 23 ஆம் தேதி நடைபெறுகிறது.

img

(விழா ஒன்றில் தோனியுடன் ரூபா)

அதற்கு முன் அனைத்து மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்படுகிறது. இதன்படி பெரும்பாலான மாநில கிரிக்கெட் சங்கங்கள் தேர்தலை நடத்தி விட்டன. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான பொதுக்குழு கூட்டத்தை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் இன்று நடத்தியது.

இதில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக, இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க முன்னாள் தலைவர் என்.சீனிவாசன் மகள் ரூபா குருநாத் ஒருமனதாக, தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநில கிரிக்கெட் சங்கங்களில் பெண் ஒருவர் தலைவராவது இதுவே முதல்முறை.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN