தமிழ் சினிமாவில் இர்பான் பதான்

Indian News

Indian News

Author 2019-10-15 03:52:54

img

புதுடில்லி: தமிழ் சினிமாவில் கால்பதிக்கிறார் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான். விக்ரம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வேகப்பந்து வீச்சு 'ஆல் ரவுண்டர்' இர்பான் பதான் 36. தற்போது 'விக்ரம் 58' என தற்காலிக பெயரிடப்பட்ட தமிழ் சினிமாவில் களமிறங்குகிறார். விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இதில் இர்பான் பதான் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் இயக்கிய அஜய் ஞானமுத்து இப்படத்தை எடுக்கின்றார்.

இதுகுறித்து இர்பான் பதான் கூறியது:

சினிமாவில் இதுவரை நடித்தது இல்லை. தற்போது போலீஸ் அதிகாரி வேடம் பொருத்தமாக இருக்கும் என்பதால் என்னை அணுகியதாக தெரிவித்தனர்.

சற்று யோசனைக்குப் பின் சம்மதித்தேன். ஏற்கனவே சென்னை ஐ.பி.எல்., அணியில் விளையாடியதால், தமிழ் மொழி எனக்கு பிரச்னை இல்லை. சென்னை, மும்பை, கோல்கட்டா மற்றும் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடக்கும். விக்ரமின் தீவிர ரசிகன் நான். இவரது பல படங்களை பார்த்துள்ளேன். விக்ரமுடன் நடிக்க உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN