தியோதர் டிராபியை கைப்பற்றி அசத்தியது இந்தியா 'பி'

Indian News

Indian News

Author 2019-11-04 23:43:44

img

ராஞ்சி

இந்தியாவின் முன்னணி வீரர்கள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தியோதர் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதிப் போட்டி ஜார்க்கண்டில் இன்று நடைபெற்றது. இந்தியா 'பி' மற்றும் இந்தியா 'சி' அணிகள் மோதிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய இந்தியா பி அணியின் தொடக்க வீரர்கள் சரியாக விளையாடாத நிலையில், அடுத்து களமிறங்கிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 54 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து இறங்கிய கேதார் ஜாதவ் நிதானமாக ஆடி 86 ரன்னில் வெளியேறினார். விஜய் சங்கர் 45 ரன்னில் அவுட்டானார்.

கடைசி கட்டத்தில் களமிறங்கிய கவுதம் கிருஷ்ணப்பா 10 பந்துகளில் 3 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

50 ஓவர்கள் முடிவில் இந்தியா பி அணி 7 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்தது. இந்தியா சி சார்பில் இஷான் போரல் 5 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய சி அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். இந்தியா சி அணியில் அதிகபட்சமாக பிரியம் கார்க் 74 ரன்கள் எடுத்தார். அக்சர் படேல் 38 ரன்னும், ஜலாஜ் சக்சேனா 37 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.

இறுதியில், இந்தியா சி அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 232 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா பி அணி சார்பில் ஷாபஸ் நதீம் 4 விக்கெட்டும், மொகமது சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் இந்தியா பி அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தியோதர் டிராபியை கைப்பற்றி அசத்தியது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD